விஸ்வகர்மா ஜெயந்தி விழா

உடன்குடியில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-09-20 18:45 GMT

உடன்குடி :

உடன்குடி விஸ்வகர்மா ஜந்தொழிலாளர்கள் நலசங்கம் சார்பாக விஸ்வகர்மா ஜெயந்தி விழா, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஆகிய நிகழ்ச்சிகள் உடன்குடியில் நடந்தது. விஸ்வகர்மாஜந் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். ஹரிகர ஜயப்பன் வரவேற்று பேசினார். இதில் டாக்டர் சுந்தர் பரமார்த்தலிங்கம், வக்கீல் சிவமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.

இதில் உடன்குடி விஸ்வகர்மா ஜந்தொழிலாளர்கள் நலச்சங்க தலைவராக பேச்சிமுத்து, பொதுச் செயலாளராக முத்துெட்சுமண பெருமாள், பொருளாளராக சண்முகசுந்தரம் மற்றும் துணைத்தலைவர், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியை முத்துலெட்சுமண பெருமாள், கோவிந்தராஜன், முத்துராமலிங்கம், கலையரசன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பரமசிவன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்