விருதுநகர் யூனியன் சாதாரண கூட்டம்

விருதுநகர் யூனியன் சாதாரண கூட்டம்

Update: 2023-03-17 18:37 GMT


விருதுநகர் யூனியன் சாதாரண கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் சுமதி ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி சேதமடைந்துள்ள பட்டம்புதூர் பள்ளி கட்டிடம், சென்னல்குடி அங்கன்வாடி மைய கட்டிடம், செங்கோட்டை கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி ஆகியவற்றை இடித்து அகற்ற அனுமதிகோரும் தீர்மானங்கள் உள்ளிட்ட 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கூட்டம் முடிவதற்கு முன்பே தீர்மான புத்தகத்தில் கவுன்சிலர்களிடம் கையெழுத்து கேட்டதற்கு ஆட்சேபனை தெரிவித்து 23-வது வார்டு கவுன்சிலர் அப்துல் ரகுமான் கூட்ட அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்