கமாண்டெண்டாக வீரேந்திர வாட்ஸ் பொறுப்பேற்பு
வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டெண்டாக வீரேந்திர வாட்ஸ் பொறுப்பேற்றார்.
குன்னூர்,
குன்னூர் அருகே வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இந்தியாவின் முப்படை அதிகாரிகளுக்கும், நட்பு நாடுகளின் முப்படை அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கல்லூரியின் கமாண்டெண்டாக லெப்டினன்ட் ஜெனரல் மோகன் பதவி வகித்து வந்தார். இவர் கடந்த மாதம் தென் சூடான் நாட்டில் உள்ள ஐ.நா.சபை அமைதிப்படை தளபதியாக நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டெண்டாக லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் நியமனம் செய்யப்பட்டார். அவர் கல்லூரியில் பொறுப்பேற்று கொண்டார்.லெப்டினட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் தேசிய பாதுகாப்பு கல்லூரி, இந்திய பாதுகாப்பு அகாடமி போன்றவற்றில் ராணுவ அதிகாரி பயிற்சி பெற்று உள்ளார். அவர் கிழக்கு பிராந்திய தளபதியாகவும், எல்லை பகுதியான காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் சிறப்பாக பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய கமாண்டெண்டாக பதவி ஏற்ற லெப்டினட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ்க்கு, அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.