விராலிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
விராலிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விராலிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் களமாவூரில் உள்ள கோவில் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் தலைமை தாங்கி வரவேற்று பேசினார். அப்போது கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஊராட்சியிலும் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு, பொங்கல் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை பெற்று தந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டையில் வருகிற 5-ந் தேதி பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக வருகை தரும் முதல்-அமைச்சருக்கு விராலிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்து விழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் காந்தி முத்துசாமி, மாவட்ட பிரதிநிதி மண்டையூர் பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பழனியம்மாள் ரவிச்சந்திரன் (தொண்டைமான் நல்லூர்), பொன்ராமன் என்ற சங்கர் (குமாரமங்களம்) மற்றும் ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் விளாப்பட்டி சிவக்குமார் நன்றி கூறினார்.