பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசார விழிப்புணர்வு ஊர்வலம்
நாகையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசார விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
நாகையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசார விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
நாகையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரசார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு, பெண் கல்வி, பெண் உரிமை, பெண்களுக்கு சம வாய்ப்பு அளித்தல், குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.
மகளிர் திட்ட பணியாளர்கள்
நாகை அவுரி திடலில் தொடங்கிய ஊர்வலம் பல்வேறு வீதிகள் வழியாக நாகை நகராட்சி அலுவலகம் வரை சென்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளின் சமுதாய வள பயிற்றுனர்கள், மகளிர் திட்ட பணியாளர்கள் உள்பட 250 பேர் கலந்து கொண்டனர்.