"லியோ" திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் விதிமீறல்களுக்கு புகார் அளிக்கலாம்-கலெக்டர்
லியோ திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்குகளில் விதிமீறல்கள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
லியோ திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்குகளில் விதிமீறல்கள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"லியோ" திரைப்படம்
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் "லியோ" திரைப்படத்திற்கு கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சி இன்று (வியாழக்கிழமை) முதல் 24-ந் தேதி (செவ்வாய்கிழமை) வரை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் திரையிட அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த திரைப்படம் தொடக்க காட்சி காலை 9 மணிக்கும், கடைசி காட்சியாக நள்ளிரவு 1.30 மணியளவில் முடிவடையும் வகையில் திரையிடுமாறும் அரசு தெரிவித்து உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் "லியோ" திரைப்படம் வெளியிடும் நிகழ்வின் போது முறையான போக்குவரத்து மற்றும் பார்க்கிங் ஏற்பாடுகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும்.
விதிமீறல்கள் ஏதும் இருப்பின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திரையரங்குகளில் கூடுதல் காட்சி நடத்தப்படும் சமயத்தில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்பாடத வகையில் பார்த்து கொள்ள வேண்டும்.
புகார் அளிக்கலாம்
திரைப்படம் காண்போரின் போக்குவரத்து வாகனங்கள் உள்வருதல், வெளியேறுதல், நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையில் போலீசாரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.
திரையரங்கு வளாகம் மற்றும் இருக்கைகள் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மேலும் விதிமீறல்கள் குறித்து புகார்கள் இருப்பின் பொதுமக்கள் செய்யாறு சப்-கலெக்டர் (9445000419), திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் (9445000420), ஆரணி வருவாய் கோட்டாட்சியர் (8072912122) ஆகியோர்களிடம் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.