விழுப்புரம்- நாகை 4 வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராட்டம்

விழுப்புரம்- நாகை 4 வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு கேட்டு விவசாயிகள் பட்டினி போராட்டம்.

Update: 2023-01-02 21:30 GMT

விழுப்புரம்,

விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே தற்போது 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்திய விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்தும், விவசாயிகளின் வாழ்வாதார பாதிப்பை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்தும், வெளிச்சந்தை மதிப்பை நிர்ணயம் செய்யக்கோரியும் நேற்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விழுப்புரம் நகராட்சி திடலில் தொடர் பட்டினி போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். இதில் அற்பிசம்பாளையம், சாலையாம்பாளையம், ஓட்டேரிப்பாளையம், சுந்தரிப்பாளையம், நன்னாட்டாம்பாளையம், ஆனாங்கூர், சாமிப்பேட்டை, கொளத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்