மூங்கில் பாலம் சேதமடைந்ததால் 1 கிலோமீட்டர் தூரம் சுற்றிச்செல்லும் கிராம மக்கள்
ெபாறையாறு அருகே வீரசோழன் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட மூங்கில் பாலம் சேதமடைந்ததால் கிராம மக்கள் 1 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்ெசன்று வருகின்றனர். இந்த பாலத்துக்கு பதில் கான்கிரீட் பாலம் கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொறையாறு:
பொறையாறு அருகே வீரசோழன் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட மூங்கில் பாலம் சேதமடைந்ததால் கிராம மக்கள் 1 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்ெசன்று வருகின்றனர். இந்த பாலத்துக்கு பதில் கான்கிரீட் பாலம் கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த மூங்கில் பாலம்
பொறையாறு அருகே திருவிளையாட்டம் ஊராட்சியில் திருவிளையாட்டம், நல்லாடை, கொத்தங்குடி ஆகிய மூன்று ஊராட்சிகளை இணைக்கும், திருவிளையாட்டம் ஊராட்சி குரும்பக்குடி, நல்லாடை முக்கூட்டு ஆகிய பகுதிகளை இணைக்கும் வீரசோழன் ஆற்றின் குறுக்கே கிராமமக்கள் மூங்கில் பாலம் அமைத்து போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.இந்த நிலையில் வீரசோழன் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் சென்றதால் மூங்கில் பாலம் சேதம் அடைந்தது. இதன் காரணமாக கிராம மக்கள் மூங்கில் பாலத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது.
சுற்றிச்செல்லும் கிராம மக்கள்
பாலம் சேதமடைந்ததால் குரும்பக்குடி கிராமத்தில் வசிக்கும் மக்கள் 1 கிலோமீட்டர் தூரம் சுற்றி நல்லாடை முக்கூட்டு சென்று அங்கிருந்து காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மங்கநல்லூர், கும்பகோணம் மற்றும் தரங்கம்பாடி தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அவல நிலை உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து சேதமடைந்த மூங்கில் பாலத்தை அகற்றி விட்டு புதிதாக அகலமான கான்கிரீட் பாலம் அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.