கள்ளழகரை தரிசிக்க கிராம மக்கள் மாட்டு வண்டியில் பயணம்

கள்ளழகரை தரிசிக்க கிராம மக்கள் மாட்டு வண்டியில் பயணம் செய்தனர்.

Update: 2023-08-08 00:52 GMT

சோழவந்தான், 

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சி.புதூர் உள்ளது. இந்த ஊரை சேர்ந்தவர்கள் பாரம்பரியமாக மாட்டு வண்டி பூட்டி கள்ளழகர் கோவிலுக்கு தரிசனம் ெசய்ய 2 ஆண்டுக்கு ஒரு முறை பழமை மாறாமல் பாரம்பரியமாக சென்று வருகின்றனர். இதன்படி நேற்று சி.புதூர் கிராமத்தில் இருந்து மாட்டு வண்டிகளை பூட்டி வரிசையாக ஒன்றின் பின் ஒன்றாக தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் சுமார் 30 கிலோ மீட்டர் தூரமுள்ள அழகர்கோவிலுக்கு சென்றனர். இரவு முழுவதும் அங்கு தங்கி இருந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அழகர்கோவில் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோவில் தீர்த்தத்தில் புனித நீராடி கள்ளழகர், ராக்காயி அம்மன், பதினெட்டாம்படி கருப்புசாமியை வணங்கினர் .பின்னர் நேர்த்திக்கடனாக கொண்டு வந்த கோழி, சேவல்களை பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். இந்த பகுதி மக்கள் விவசாயம் செழிக்கவும், மழை பெய்ய வலியுறுத்தியும் இந்த பாரம்பரிய மாட்டுவண்டி பயணம் மேற்கொண்டு கள்ளழகரை வழிபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்