காளியம்மன் கோவிலுக்கு சீர்வரிசை எடுத்துச்சென்ற கிராம மக்கள்

காளியம்மன் கோவிலுக்கு கிராம மக்கள் சீர்வரிசை எடுத்துச்சென்றனர்.

Update: 2022-08-08 19:21 GMT

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கிராமத்தில் மகா மாரியம்மன், பிடாரி காளியம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. கோவிலில் காளியாட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் பிடாரி காளியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் தாலி, வெள்ளியில் கிரீடம், பட்டுப்புடவைகள், வளையல்கள், பூக்கள், பழங்கள், தென்னங்கன்றுகளை கிராம மக்கள் சீர்வரிசையாக எடுத்துக்கொண்டு மேலத்தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து கீழத்தெருவில் உள்ள பிடாரி காளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

இந்நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை காளியாட்டம் தொடங்கி, 7 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த காளியாட்டத்தால் கோவிந்தபுத்தூர் கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த காளியாட்ட உற்சவ ஏற்பாட்டை ஊர் நாட்டாண்மைகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்