பாலமேடு அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

பாலமேடு அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Update: 2022-11-26 20:13 GMT

அலங்காநல்லூர், 

பாலமேடு அருகே உள்ள மாணிக்கம்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டி கிராம மக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மாணிக்கம்பட்டி முதல் ராஜக்காள்பட்டி செல்லும் சாலையும் அதே நிலையில் உள்ளது. இந்தப் பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இந்த வழியாக வாகனங்கள் அதிகமாக செல்வதால் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் பொது நலன் கருதி புதிய தார்சாலை அமைத்து தரக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாலமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் பேசினர்.அதன் பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்