கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

நெமிலி அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-07 17:13 GMT

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே ஆட்டுப்பாக்கத்தில் பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்களிடையே ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஒருதலைபட்சமாக குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே மாகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் பணிகள் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிப்படைந்த மற்ற சமூகத்தை சேர்ந்த கிராம மக்கள் அதிகாரிகளை கண்டித்து இன்று மாலை திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெமிலி போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதமுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக பணிகள் வழங்குவதாக உறுதியளித்தனர்.

பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் நெமிலி -அரக்கோணம் சாலையில் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்