சாத்தூர்
சாத்தூர் அருகே பாப்பாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியகுமார்ராஜா. இவர் கோவில் மற்றும் மயானத்திற்கு செல்லும் பாதையில் கம்பி வேலி அமைத்துள்ளார். இந்த கம்பிவேலியை அகற்றக்கோரி பாப்பாக்குடி கிராமத்தை சேர்ந்த50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த இருக்கன்குடி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக போலீஸ் உதவியுடன் கம்பி வேலியை அகற்றியதால் போராட்டம் கைவிடப்பட்டது.