குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல்

விருதுநகர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-14 19:41 GMT

விருதுநகர் அருகே கன்னிசேரி புதூரில் குறிப்பிட்ட பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாத நிலையில் அப்பகுதி மக்கள் இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வச்சக்காரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.


Tags:    

மேலும் செய்திகள்