கோவில்பட்டியில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு ஈராச்சி கிராம மக்கள் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.நல்லையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் முழுமையாக 100 நாட்களும் வேலை வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க எட்டயபுரம் தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர்கள் சுப்புராஜ், மாரியப்பன், எட்டயபுரம் தாலுகா குழு உறுப்பினர் ராமலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அவர்கள் யூனியன் அலுவலக மேலாளர் தனலட்சுமியிடம் கோரிக்கை மனு வழங்கிவிட்டு கலைந்து சென்றனர்.