கோவில்பட்டியில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி உதவிகலெக்டர் அலுவலகம் முன்பு கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-24 11:03 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு குமாரகிரி கிழக்குத் தெருவைச் சேர்ந்த விமல்ராஜ் மனைவி கவிதா தலைமையில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளர் ராஜசேகர், பகத்சிங் ரத்ததான கழக தலைவர் காளிதாஸ், புரட்சி பாரத கட்சி மாவட்ட செயலாளர் தாவீது ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

குமரகிரி கிராமத்தில் தங்களுக்கு சொந்தமான விளை நிலங்கள் வழியாக தனியார் சோலார் நிறுவனம் சோலார் விதிமுறைகளை மீறி டவர் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தக் கோரியும், அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழியாகக் கொண்டு செல்ல அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்தபோராட்டம் நடந்தது. பின்னர் உதவி- கலெக்டர் மகாலட்சுமியை சந்தித்து கோரிக்ைக மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்