கண்காணிப்பு கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
கண்காணிப்பு கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
கூடலூர்
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து தடுக்க 5 இடங்களில் வனத்துறையின் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர் அருகே லாரஸ்டன் நம்பர்-4 பகுதியில் கண்காணப்பு கோபுரம் அமைக்கும் பணிகளுக்காக பொக்லைன் எந்திரத்துடன் வனத்துறையினர் சென்றனர். இதை அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து பணிகளை தடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கூடலூர் வனச்சரகர் ராஜேந்திரன் மற்றும் தாசில்தார் சித்தராஜ் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பிரச்சினை தொடர்பாக கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அதிகாரிகள் உறுதி அளித்ததால் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.