சாலை வசதி கேட்டு கிராம மக்கள் மறியல்

நத்தம் அருகே சாலை வசதி கேட்டு கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 61 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-08 19:00 GMT

சாலை மறியல்

நத்தம் -மதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள பரளி சுங்கச்சாவடி பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் உள்ளது பொடுகம்பட்டி கிராமம். பரளி சுங்கச்சாவடி பகுதியில் இருந்து இந்த கிராமத்திற்கு செல்வதற்கு முறையான சாலைவசதி கிடையாது.

இது குறித்து நான்கு வழிச்சாலை நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை விடுத்தும் சாலை வசதி செய்து தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை வசதி செய்து தரக்கோரி பரளி சுங்கச்சாவடி பகுதியில் நேற்று காலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

61 பேர் கைது

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிடவில்லை. இதுதொடர்பாக மறியலில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 61 பேரை நத்தம் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் நத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர்கள் அடைத்து வைத்து, மாலையில் விடுவிக்கப்பட்டனர். மறியல் காரணமாக மதுரை -நத்தம் சாலையில் சுமார் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்