குளத்தில் போட்டி போட்டு மீன்பிடித்த கிராம மக்கள்

நத்தம் அருகே குளத்தில் கிராம மக்கள் போட்டி, போட்டு மீன் பிடித்தனர்.

Update: 2023-09-10 19:45 GMT

நத்தம் அருகே சிறுகுடியில் கருங்குட்டு கோவில் அருகே குளம் உள்ளது. தற்போது இந்த குளத்தில் தண்ணீர் குறைவாக உள்ளது. இங்கு மீன்பிடி திருவிழா நடத்துவது என்று கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று சிறுகுடி குளத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது. காலையில் கிராம மக்கள் திரண்டு வந்தனர்.

பின்னர் அங்குள்ள கருங்குட்டு கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். அதன்பிறகு மீன்பிடி திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து பூசாரிபட்டி, அரண்மனைப்பட்டி, சமுத்திராப்பட்டி, நல்லகண்டம், ஒடுகம்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் குளத்தில் இறங்கி போட்டிப்போட்டு மீன்களை பிடித்தனர். இதற்காக அவர்கள் ஊத்தா கூடை, வலை ஆகியவற்றை பயன்படுத்தினர். கட்லா, ஜிலேபி, விறால், பாறை, கெண்டை உள்ளிட்ட மீன்கள் அதிக அளவில் கிடைத்தன. குளத்தில் இறங்கி தாங்கள் பிடித்த மீன்களை வீடுகளுக்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்