கிராம மக்கள் சாலை மறியல்

முசிறி அருகே கழிவறைக்கு செல்ல பாதை கேட்டு கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-07 20:04 GMT

முசிறி அருகே கழிவறைக்கு செல்ல பாதை கேட்டு கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

முசிறி அருகே செவந்தலிங்கபுரம் மேல தெருவில் கடந்த 2015-ம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கழிவறை கட்டப்பட்டது. ஆனால் பாதை வசதியில்லாததால் பயன்பாட்டில் இல்லை. எனவே கழிவறைக்கு செல்ல பாதை வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் பாதைவசதி கேட்டு மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின், மண்டல துணை தாசில்தார் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட ெபாதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி-நாமக்கல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்