கிராம மக்கள் சாலைமறியல்

கிராம மக்கள் சாலைமறியல்

Update: 2022-09-17 18:45 GMT

தலைஞாயிறை அடுத்த மணக்குடி கடைத்தெருவில் கடந்த சில நாட்களாக அந்த பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் சரியாக வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று கொள்ளிடம் கூட்டு குடிநீர் வராததை கண்டித்து மணக்குடி கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தலைஞாயிறு போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நாளை முதல் கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்