கிராம மக்கள் சாலை மறியல்

நிறுத்தப்பட்ட ரெயில்வே சுரங்கப்பாதை பணிகளை முடிக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.

Update: 2023-10-14 18:20 GMT

அரக்கோணம் - மும்பை ரெயில் மார்கத்தில் அரக்கோணத்தில் இருந்து கைனூர் கிரமாம் செல்லும் சாலையில் ரெயில்வே கேட் இருந்தது. அந்த இடத்தில் ரெயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதை அமைக்க ஒப்பந்தம் அளிக்கப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது.

சுரங்கப்பாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் சில காரணங்களால் கடந்த சில மாதங்களாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரெயில்வே சுரங்கப்பாதை முடிக்கப்படாமல் இருப்பதால் சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 6 கிலோ மீட்டர் தூரம் சுற்றிவரவேண்டி உள்ளது.

இதனால் முதியவர்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே ரெயில்வே சுரங்கப்பாதை பணியை தொடங்கி விரைந்து முடிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என கூறி அரக்கோணம் - சோளிங்கர் சாலையில் கைனூர் ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக அரக்கோணம் - சோளிங்கர் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்