புத்தானத்தம் அருகே கிராம மக்கள் சாலை மறியல் .

புத்தானத்தம் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-16 19:35 GMT

புத்தானத்தம் அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாடகம்

மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே உள்ள குருமலைபட்டியில் பனமரத்து கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு நாடகம் நடத்திட கோர்ட்டு மூலம் அனுமதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தனி நபர் ஒருவர் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நாடகத்தை நடத்தக்கூடாது என்று மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அதிகாரி கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் வடக்கு இடையபட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

பின்னர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் புத்தானத்தம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நாடகம் நடைபெற உறுதி அளித்ததை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்