தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-04-22 18:45 GMT

மானாமதுரை

மானாமதுரை அருகே புளிச்சிகுளம் கிராமத்தில் ராணுவ வீரர் ஒருவர் ஓய்வு பெற்ற பின்பு 2½ ஏக்கர் நிலம் இலவசமாக பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது அதனை அவர் விற்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த இடத்தை கிராமத்திற்கு வழங்க கோரி கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வட்டாட்சியர் சாந்தியிடம் மனு அளித்தனர். தாசில்தார் விசாரணை செய்து கிராம மக்களிடம் தகவல் தெரிவிக்கப்படும் எனக் கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்