ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

நத்தம் அருகே ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-05-23 19:00 GMT

நத்தம் அருகே உள்ளது சாத்தாம்பாடி கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து மயானத்திற்கு ஓடைபாதை வழியாக தான் செல்லவேண்டும். மயான பாதையை தனிநபர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வருவாய்துறைக்கு புகார் மனு கொடுக்கப்பட்டு நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை என தெரிகிறது.. இந்நிலையில் மயான பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சாத்தாம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு உதயக்குமார், தாசில்தார் சுகந்தி, இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி முருகன் மற்றும் வருவாய்துறையினர் நேரில் சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மயான பாதையில் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்