கோவில்பட்டியில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை கூட்டம்

கோவில்பட்டியில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-19 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி நடராஜபுரம் தெரு மலையாளத்து சுடலை மகாராஜா கோவில் வளாகத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஒருங் கிணைப்பாளர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தூத்துக்குடியில் அக்.16-ந் தேதி கிராம கோவில் பூசாரிகள் மாவட்ட மாநாடு நடைபெறுவது என்றும், மாநாட்டில் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள அனைத்து கோவில் பூசாரிகளும் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் மாதம் ஊதியம் வழங்க வேண்டும். பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டது. கூட்டத்தில் மகாராஜா கோவில் நிர்வாகி சங்கர் சுவாமிகள், மாவட்ட இணை அமைப்பாளர் திருவு, ஒன்றிய அமைப்பாளர் மூக்கையா, இணை அமைப்பாளர் போத்திராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்