கிராம ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

கிராம ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.

Update: 2022-09-12 18:16 GMT

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலாளர் சங்கத்தில் உள்ளவர்கள் 3 நாட்கள் விடுப்பு எடுக்கும் கவன ஈர்ப்பு போராட்டம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் செயலாளர்கள் நேற்று விடுப்பு எடுத்து பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் காமராஜ் கூறுகையில், கிராம ஊராட்சி தலைவர்கள் மூலம் செயலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உரிய காலத்தில் வழங்கப்படாத நிலையில், அதனை கருவூலம் மூலமாக ஊதியம் வழங்கிட வேண்டும். இணையதளத்தில் வீட்டு வரி விவரங்களை கால அவகாசம் வழங்கப்படாமல் பதிவு செய்து விடவும், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட இயலாதவர்களின் விவரங்களை கணக்கெடுப்பு செய்வதற்கு உரிய அவகாசம் வழங்காமல் உடனடியாக விவரங்கள் கோரப்படுவதை கண்டித்தும் ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) நடைபெறும், என்றார். பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 121 கிராம ஊராட்சிகளில், 10 காலிப்பணியிடங்கள் போக, ஒருவரை தவிர 110 ஊராட்சி செயலாளர்கள் நேற்று விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராம ஊராட்சி மன்றங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்