கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-12-31 18:45 GMT

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம ஊராட்சி களப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வெற்றிச்செல்வன் தலைமை தாங்கினார். ஊராட்சி களப் பணியாளர் சங்க மாவட்டத்தலைவர் செல்வி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார், செயலாளர் மகேந்திரன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், ஆப்ரேட்டர்கள் அனைவருக்கும் பொங்கல் கருணை தொகை வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய பணியாளர்களுக்கு கருணை தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்