கிராம உள்ளாட்சி துறை பணியாளர் சங்க கூட்டம்

கிராம உள்ளாட்சி துறை பணியாளர் சங்க கூட்டம்

Update: 2022-11-07 18:45 GMT

நீடாமங்கலம் வட்டார கிராம உள்ளாட்சி துறை பணியாளர் சங்க (ஏ.ஐ.டி.யூ.சி.) கூட்டம் ஒன்றிய துணைத்தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இ்தில் மாவட்ட தலைவர் சாந்தகுமார், ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய துணைச்செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில், அனைத்து ஊராட்சிகளிலும் பணியாளர்களுக்கு ஊதியம் பாக்கி நிலுவையில் உள்ளது. இதனை உடனடியாக வழங்க வேண்டும். மழை காலங்களில் பணியாளர்களுக்கு கையுறை, மாஸ்க் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். ஊதிய உயர்வுக்கான ஆணை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்றும் வகையில் ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு சேர்த்து புதிய ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக ஒன்றியத்தலைவர் வேதமாணிக்கம் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முடிவில் ஒன்றிய பொருளாளர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்