கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரக்கோணத்தில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-17 19:02 GMT

தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மாலை அரக்கோணம் வட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயலாளர் ஜெயபால், பொருளாளர் அஜந்தபிரியன் ஆகியோர் வரவேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல கிராம உதவியாளர்களுக்கு பொங்கல் போனாஸ் சதவீத அடிப்படையில் வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த 4 சதவீத அகவிலைப்படியை தீபாவளி பண்டிக்கைக்கு முன் அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் ஞானஉதயம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்