கிராம வளர்ச்சி திட்ட முகாம்

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் கிராம வளர்ச்சி திட்ட முகாம் நடந்தது.

Update: 2023-01-04 18:45 GMT

கடையம்:

கடையம் அருகே ரவணசமுத்திரம் ஊராட்சியில் கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் முகமது உசேன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமலட்சுமி சங்கிலி பூதத்தார் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர் கனகா, வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி, வேளாண்மை அலுவலர் அபிராமி, துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம், உதவி வேளாண்மை அலுவலர் ஜெகதீஸ்வரன், கலைஞர் திட்ட பொறுப்பு அலுவலர் பால்துரை ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகள் 40 விவசாயிகளுக்கு, முதல் கட்டமாக இரண்டு தென்னை கன்றுகள் வழங்கினர். நிகழ்ச்சியில் சேவாலயாவின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கிலி பூதத்தார், சிறுபான்மை பிரிவு முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க செயலாளர் முகமது சலீம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஊராட்சி மன்ற செயலாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்