குல்லூர்சந்தை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

குல்லூர்சந்தை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது

Update: 2022-12-30 18:45 GMT

விருதுநகர் அருகே அருப்புக்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட குல்லூர்சந்தை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2020-2021, 2021-2022-ம் ஆண்டு சமூக தணிக்கை கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும் ஊரின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்