சுதந்திர தினத்தையொட்டி திருக்கடையூரில் கிராம சபை கூட்டம்

சுதந்திர தினத்தையொட்டி திருக்கடையூரில் கிராம சபை கூட்டம் நடந்தது.

Update: 2023-08-16 18:45 GMT

திருக்கடையூர்:

திருக்கடையூர் அரசு நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், உறுப்பினர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஆக்கூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் தலைமையில், கிள்ளியூர் ஊராட்சி தலைவர் கோவிந்தசாமி தலைமையில், பிள்ளை பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் தீபா முனுசாமி தலைமையில், டி. மணல்மேடு ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி துரைராஜன் தலைமையில், மடப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் மெஹராஜின்னிசா செல்வநாயகம் தலைமையில், காலமநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடந்தன. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சுதந்திர தினத்தையொட்டி

Tags:    

மேலும் செய்திகள்