புள்ளானேரியில் கிராமசபை கூட்டம்
புள்ளானேரியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
ஜோலார்பேட்டை
புள்ளானேரியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம், புள்ளானேரி கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் கு. செல்வராசு, ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெ.மணவாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் டி.சங்கர் வரவேற்றார்.
கூட்டத்தில் திருப்பத்தூர் தி.மு.க.மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துக் கூறி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
கூட்டத்தில் ஜோலார்பேட்டை தி.மு.க.மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சதீஷ்குமார், மத்திய ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் பி முருகேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பி. வேடியப்பன், கிராம நிர்வாக அலுவலர் அருணா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சங்கர் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.