கிராம சபை கூட்டம்

விழுந்தமாவடியில் கிராம சபை கூட்டம் நடந்தது.

Update: 2023-10-02 18:45 GMT

வேளாங்கண்ணி:

கீழையூர் ஊராட்சி ஒன்றியம் விழுந்தமாவடியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி வளர்ச்சிக்கான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள அனைத்து வீடு கட்டும் பணிகளையும் வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டி உள்ளதை பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும். ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சியாக உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் அலெக்ஸ், பொதுமக்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்