கிராம நிர்வாக அதிகாரிகள் அதிரடி மாற்றம்

கிராம நிர்வாக அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2023-07-01 19:41 GMT

சின்ன வாடியூரில் பணியாற்றும் பழனி சின்ன மூப்பன்பட்டிக்கும், பெரிய பேராலியில் பணியாற்றும் ராம கார்த்திக் ராஜா முத்துராமன்பட்டிக்கும், கோட்டையூர் கிராமத்தில் பணியாற்றும் சிவக்குமார் அல்லம்பட்டிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அப்பையநாயக்கன்பட்டியில் பணியாற்றும் சமையன் ரோசல்பட்டி கிராமத்திற்கும், சிவஞானபுரத்தில் பணியாற்றும் பாண்டியராஜ் விருதுநகருக்கும், புளியங்குளத்தில் பணியாற்றும் அருணகிரி கோட்டைப்பட்டிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கூரைக்குண்டு கிராமத்தில் பணியாற்றும் கருப்பசாமி அ.புதுப்பட்டிக்கும், கோட்டைப்பட்டியில் பணியாற்றும் உமா கணேசன் பெரிய பேராலி கிராமத்திற்கும், விருதுநகரில் பணியாற்றும் ராஜு அப்பைய நாயக்கன்பட்டிக்கும், ரோசல்பட்டியில் பணியாற்றும் சந்திரசேகரன் கோட்டையூருக்கும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அல்லம்பட்டியில் பணியாற்றும் சுதா ராணி புளியங்குளத்திற்கும், முத்துராமன்பட்டியில் பணியாற்றும் ராஜலட்சுமி சின்னவாடியூரூக்கும், சின்ன மூப்பன்பட்டியில் பணியாற்றும் செல்வி சிவஞானபுரத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 'அ' பிரிவு கிராமங்களில் பணியாற்றும் 27 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்தாய்வின் போது தங்களுக்கு வேறு கிராமங்களை தேர்வு செய்யாத நிலையில் அவர்கள் பணியாற்றும் கிராமங்களில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுபற்றி அவர்களது பணி பதிவேட்டில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்