கிராம நிர்வாக அலுவலகம் கட்ட அதிகாரி ஆய்வு

ஜோலார்பேட்டை அருகே கிராம நிர்வாக அலுவலகம் கட்ட அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2022-09-06 19:06 GMT

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே கிராம நிர்வாக அலுவலகம் கட்ட அதிகாரி ஆய்வு செய்தார்.

ஜோலார்பேட்டையை அடுத்த கட்டேரி கிராமத்தில் தற்போது கிராம நிர்வாக அலுவலகம் இல்லாத நிலை இருந்து வருகிறது. இதனால் கடந்த மாதம் தமிழக சட்டமன்ற பேரவை கணக்கு குழு ஏலகிரி மலை, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கட்டேரி பகுதியை சேர்ந்த சரவணன், கட்டேரி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அமைக்க வேண்டும் என மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில் திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலகம் அமைக்க இடம் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட கவுன்சிலர் ஜெ.சிந்துஜா ஜெகன் தனது 3 சென்ட் சொந்த இடத்தை இலவசமாக வழங்க ஒப்புதல் அளித்தார்.

அதன் பேரில் நேற்று தாசில்தார் சிவப்பிரகாசம் கட்டேரி கிராமத்திற்கு சென்று கிராம நிர்வாக அலுவலகம் அமைக்க வழங்க உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கட்டேரி ஊராட்சி மன்ற தலைவர் மாதவன், ஜோலார்பேட்டை வருவாய் ஆய்வாளர் ரவிமா ராஜன், கிராம நிர்வாக அலுவலர் ராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்