கிராம நிர்வாக அலுவலக கட்டிட சுவர் இடிந்து தலையாரி படுகாயம்
கிராம நிர்வாக அலுவலக கட்டிட சுவர் இடிந்து தலையாரி படுகாயம்
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே பொன்னமங்கலம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த கட்டிடத்தின் மேற்கூரைகள், தூண்கள் ஆங்காங்கே சேதமடைந்து இருந்தன. இ்ங்கு கிராம நிர்வாக அலுவலராக அழகுராஜா (பொறுப்பு) பணியாற்றி வருகிறார். தற்போது அழகுராஜா விடுப்பில் இருப்பதால் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை கிராம அலுவலக உதவியாளர்(தலையாரி) அருண் அலுவலகத்தை திறந்து வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அலுவலக மேற்கூரை கான்கிரீட் திடீரென பெயர்ந்து அருண் தலையில் விழுந்தது. இதில் படு காயம் அடைந்த அவர் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.