கந்தசஷ்டி விழா, திருக்கல்யாணம்

கந்தசஷ்டி விழா, திருக்கல்யாணம் நடக்கிறது.

Update: 2022-10-29 16:21 GMT


ராமநாதபுரம் பெருவயல் ரணபலி முருகன் என்ற வள்ளி, தேவசேனா சமேத சிவசுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. தினமும் சாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. நாளை (31-ந்தேதி) காலை 9 மணிக்கு மேல் வள்ளி, தேவசேனா சமேத சிவ சுப்பிரமணிய சாமி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா ராணி சேதுபதி பிரம்ம கிருஷ்ண ராஜேசுவரி நாச்சியார் ஆலோசனையின் பேரில் திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொருப்பாளர் விக்னேசுவரன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்