எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள கரிசல்பட்டியில் மதநல்லிணக்க கந்தூரி விழா நடைபெற்றது. முன்னதாக இயற்கை சீற்றத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டி சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. தொடர்ந்து அனைத்து சமுதாய பொதுமக்கள் சுமார் 500 பேருக்கு கந்தூரி உணவு வழங்கப்பட்டது. இரவில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏற்பாடு களை கரிசல்பட்டி ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.