சாயல்குடி,
கடலாடியில் பத்ரகாளியம்மன் தசரா குழுவினர் மகாகாளி பூஜை, கும்பம் வீதி உலா, தசரா திருவிழா நடைபெற்றது. குலசை ஞான மூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் மகாகாளி பூஜையையொட்டி அம்மனுக்கு அலங்காரம் சிறப்பு பூஜை, பஜனை பாடல்கள், தீபாராதனை நடைபெற்றது. கடலாடி மங்கள விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் கரகம் அக்னி சட்டி ஏந்தி பக்தி பரவசத்துடன் கடலாடி முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் சென்று பத்ரகாளியம்மன் கோவில் வழியாக முத்தாரம்மன் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து பொது அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.