மண்டபம் யூனியன் பகுதியில் சுதந்திர தினவிழா
மண்டபம் யூனியன் பகுதியில் சுதந்திர தினவிழா சிறப்பாக நடைபெற்றது. யூனியன் அலுவலகத்தில் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பனைக்குளம்,
மண்டபம் யூனியன் பகுதியில் சுதந்திர தினவிழா சிறப்பாக நடைபெற்றது. யூனியன் அலுவலகத்தில் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
யூனியன் அலுவலகம்
75-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி மண்டபம் பகுதியில் அமுதப்பெருவிழா கொண்டாடப்பட்டது. விழாவை யொட்டி உச்சிப்புளியில் உள்ள மண்டபம் யூனியன் அலு வலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகநாதன், யூனியன் துணை தலைவர் பகவதி லட்சுமி முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அலுவலக மேலாளர் சோமசுந்தர் அனைவரையும் வரவேற்று பேசினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பால கிருஷ்ணன், திருமுருகன், கோட்டை இளங்கோவன், சியாமளா, அலுவலக உதவியாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு 75-வது ஆண்டு பவளவிழாவை சிறப்பித்தனர்.
மரியாதை
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். மண்டபம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் ராஜா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பதி, பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை இளநிலை உதவியாளர் முனியசாமி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
இதேபோல ஊராட்சி தலைவர்கள் அழகன்குளம் வள்ளி, ஆற்றங்கரை முகமது அலி ஜின்னா, ரெட்டையூரணி கணேசன், இருமேனி சிவக்குமார், என்மனங்கொண்டான் கார்மேகம், காரான் சக்திவேல், கீழநாகாச்சி ராணி, கும்பரம் துளசிதேவி, கோரவள்ளி கோகிலாவாணி, சாத்தக்கோன்வலசை நாகேசுவரி, செம்படையார்குளம் கண்ணம்மாள், தாமரைக்குளம் களஞ்சியலட்சுமி, தேர்போகி மோகன்குமார், பட்டணம்காத்தான் சித்ரா மருது, பனைக் குளம் பவுசியாபானு, பிரப்பன்வலசை கலா உடையார், புதுமடம் காமில்உசேன், புதுவலசை மீரான்ஒலி, பெருங்குளம் கோ.சிவக்குமார், மரைக்காயர்பட்டினம் பைரோஸ் ஆசியம்மாள், மானாங்குடி பரமேசுவரி, வாலாந்தரவை முத்தமிழ்செல்வி, வெள்ளரிஓடை சந்திரசேகர், வேதாளை செய்யது அல்லாபிச்சை, நொச்சியூரணி சீனி அரசு, பாம்பன் அகிலா பேட்ரிக் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர்.
ஏற்பாடு
தங்கச்சிமடத்தில் குயின்மேரி, ராமநாதபுரம் யூனியன் தேவிபட்டினம் ஹமிதியா ராணி ஜாகீர் உசேன், அத்தியூத்து அப்துல் மாலிக், சித்தார்கோட்டை முஸ்தரி ஜஹான் ஆகியோர் அந்தந்த ஊராட்சிகளில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். இதில் துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், மகளிர் மன்றத்தினர் மற்றும் கிராம பிரமுகர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலர்கள் செய்திருந்தனர். இதேபோல அனைத்து கிராமங்களிலும் முஸ்லிம் ஜமாத்துக்கள், அனைத்து சமூகத்தினர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.