வருடாபிஷேக விழா
நீர்க்குன்றம் அமிர்தகடேசுவரர் கோவிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
தொண்டி,
திருவாடானை தாலுகா, மங்கலக்குடி அருகே உள்ள நீர்க்குன்றம் கிராமத்தில் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேசுவரர் கோவில் உள்ளது. இங்கு வருடாபிஷேக விழா நடைபெற்றது. இதனையொட்டி சாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பல்வேறு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தி.மு.க. தலைமை தணிக்கை குழு உறுப்பினர் வக்கீல் காசிநாதன், டாக்டர் அமுதா காசிநாதன் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.