விக்கிரவாண்டி ஒன்றியக்குழு கூட்டம்

விக்கிரவாண்டி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-07-07 18:45 GMT

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சங்கீதஅரசி ரவிதுரை தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் ஜீவிதா ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, முபாரக் அலி பேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபாலன் வரவேற்றார். இளநிலை உதவியாளர் தணிகைவேல் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ள ரூ.1 கோடியே 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஓன்றிய பொறியாளர்கள் இளையராஜா, நடராஜன், முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் காமராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்