விக்கிரமங்கலம் அரசு பள்ளியில் விழிப்புணர்வு பேரணி

மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விக்கிரமங்கலம் அரசு பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2023-04-29 19:45 GMT

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா முன்னிலை வகித்தார். விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்