விகாஸ் வித்யாலயா பள்ளியில் அப்துல் கலாம் நினைவு நாள்

Update: 2023-07-27 17:07 GMT


திருப்பூர் கூலிபாளையம் நால்ரோடு அருகே விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு நேற்று மாலை அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாமின்உருவப்படத்திற்கு பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதா ராமசாமி, செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணைச்செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன், முதல்வர் அனிதா ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாணவ-மாணவிகள் உள்பட அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய பின் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்துஅப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனை குறித்து மாணவ-மாணவிகள் பங்கேற்ற நாடகம், கவிதை, பேச்சுப்போட்டி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பள்ளி மாணவ-மாணவிகள்,ஆசிரிய-ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்