விஜயகரிசல்குளம் அகழாய்வில் 2 தங்க அணிகலன்கள் கிடைத்தன

சிவகாசி அருகே விஜயகரிசல்குளம் அகழாய்வில் 2 தங்க அணிகலன்கள் கிடைத்தன

Update: 2023-06-06 19:52 GMT

தாயில்பட்டி, 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுடுமண் வணிக முத்திரை, புகைப்பான், கல்லால் செய்த எடைக்கல், செப்பு நாணயம், கண்ணாடி மணிகள் உள்பட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் நேற்று 2 தங்க அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒன்று 2 கிராம் எடையில் தங்க பட்டையும், 2.2 கிராமில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய குமிழ் வடிவ தங்க அணிகலனும் கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம் பழங்காலத்திலேயே தமிழர்கள் கலைநயமிக்க தங்க அணிகலன்களை அணிந்து வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

விஜயகரிசல்குளத்தில் நடந்த முதல் கட்ட அகழாய்விலும் தங்க அணிகலன் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2-ம் கட்ட அகழாய்வில் இதுவரை 8 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து 1,600-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த அகழாய்வில் கீழடிக்கு இணையாக அரிய வகையிலான பழங்கால பொருட்கள் கிடைத்து வருவதாகவும் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்