விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கே.வி.குப்பத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கே.வி.குப்பம்,
கே.வி.குப்பத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கே.வி.குப்பம் பஸ்நிலையம் அருகில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கே.வி.குப்பம் தொகுதி செயலாளர் மு.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் நீலசந்திரகுமார், வேலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் சிவ.செல்லபாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் தொகுதி துணை செயலாளர் ம.சங்கர் நன்றி கூறினார்.