ஈரோடு வழியாகரெயிலில் கடத்தப்பட்ட 8 கிலோ குட்கா பறிமுதல்

ஈரோடு வழியாக ரெயிலில் கடத்தப்பட்ட 8 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-12-29 21:58 GMT

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 7.15 மணிஅளவில் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தது. அந்த ரெயிலில் ஈரோடு ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினார்கள்.

அப்போது கழிப்பறைக்கு அருகில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை கைப்பற்றி போலீசார் சோதனையிட்டனர். அதில் குட்கா இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரெயிலில் கடத்தப்பட்ட 8 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்