கால்நடை விழிப்புணர்வு முகாம்
ஆலங்குளம் அருகே கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கிடாரக்குளம் கிராமத்தில் நெல்லை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல் மற்றும் தென்காசி கோட்ட உதவி இயக்குனர் மகேஸ்வரி ஆகியோரின் அறிவுரைப்படி நெட்டூர் கால்நடை மருந்தகம் முலம் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மழைக்காலங்களில் கால்நடைகளை தாக்கும் கால் மற்றும் வாய் நோய், தோல் கழலை நோய் , பறவைக் காய்ச்சல் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினர். நோயுற்ற கால்நடைகளின் ரத்தம், பால், சாணம், சிறுநீர் மற்றும் நாசி திரவம் போன்ற மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். சிறந்த கால்நடை பராமரிப்பு மேலாண்மை விருது மற்றும் கன்று பேரணி நடத்தி சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கால்நடை வளர்க்கும் ஏராளமான விவசாயிகள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.